கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னரான பொது மக்களின் நடத்தை வருத்தம் அளிப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (26) ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர் சுகாதார விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு இணங்காமல் போகும் அபாயம் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தினசரி 500 கொவிட் நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் பொறுமையாகவும் பாதுகாப்பாகவும் செயற்பட்டால் பாரிய வெற்றியைப் பெற முடியும் என சுகாதார பணிப்பாளர் நாயகம், அசேல குணவர்தன வலியுறுத்தினார்.