
எரிபொருள் மோசடியில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையிலும் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமானால் அது தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடு செய்யவும் விபரங்களை பெற்றுக் கொள்ளவும் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் படி, 011 5455130 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தொடர்பு கொண்டு பொது மக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைப்பதாக சந்தேகித்தாலோ மக்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.