May 13, 2025 10:46:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை- கட்டார் இருதரப்பு மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் ஷெய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

டோஹா நகரில் அமைந்துள்ள கட்டார் மத்திய வங்கியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கொவிட் தாக்கங்களில் இருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை– கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.