இலங்கைக்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய மத்திய வங்கி நிதியை வழக்கும் என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமாக இருக்கும் எனவும், ஆகவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.