May 31, 2025 11:07:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இரண்டு விலைகளில் எரிபொருள் விநியோகம்!

Photo: Facebook/Lanka IOC

லங்கா ஐஓசி நிறுவனம் இன்று முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை அதிகரிப்புக்கமைய லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 162 ரூபாவாகவும் மற்றும் ஒடோ டீசலின் விலை 116 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்.

எனினும், சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையயங்களில் பழைய விலைகளுக்கே எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி அங்கு ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 157 ரூபாவுக்கும், ஒடோ டீசல் லீட்டர் ஒன்று 111 ரூபாவுக்கும் விநியோகிக்கப்படுகின்றது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.