நடத்துனர் இல்லாமல் தனியார் பஸ் சேவையை முன்னெடுக்கும் யோசனை போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் முன்மொழியப்பட்டது.
இந்த முன்மொழிவை இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு வருவாய் குறைந்து வரும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஏற்கனவே நடத்துனர் இல்லாமல் நாட்டில் பல பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளை நடத்துனர் அல்லது உதவியாளர்களுடனும் மற்றும் இல்லாமலும் சேவையை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த முறையின் கீழ் பயணிகளிடம் பணம் பெறுவதற்காக சாரதிகளுக்கு அருகில் ஒரு பெட்டி அமைக்கப்பட்டு அதில் மக்கள் பணம் செலுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
அத்தோடு பயணிகள் நேர்மையாக செயல்படுவார்கள் என நம்புவதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.