April 11, 2025 4:15:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம்!

நவராத்திரி விரத்ததின் கடைசி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் மானம்பூ திருவிழா  விமர்சையாக நடைபெற்றது.

காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில்  சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.

பக்தர்கள் சுகாதார இடைவெளிகளை பின்பற்றி இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.