January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் இருந்து ‘நெனோ நைட்ரஜன் யூரியா’ திரவ உரம் இலங்கை வந்தது

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ‘நெனோ நைட்ரஜன் யூரியா’ திரவ உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் இந்த திரவ உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதன்படி ஒரு இலட்சம் லீட்டர் ‘நெனோ நைட்ரஜன் யூரியா’ திரவ உரம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகள் அலுவலம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள குறித்த உர தொகை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பெரும்போக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்ககப்படவுள்ளனதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தினுள் மாத்திரம் 5 இலட்சம் லீட்டர் ‘நெனோ நைட்ரஜன் யூரியா’ திரவ உரத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ‘சுற்றாடலுக்கு இணைவான விவசாயம்’ எனும் கருத்திட்டத்தின் கீழ் பெரும்போக செய்கையில் சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.