பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து கைது செய்யப்படுள்ளனர்.
நீர்கொழும்பு- சீதுவ மற்றும் ஆண்டியம்பலம் ஆகிய பிரதேசங்களில் வசித்து வரும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, இவர்கள் சீதுவை, கட்டுநாயக, கந்தானை மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் உட்பட இன்னும் பல இலத்தரனியல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.