May 29, 2025 22:06:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைவடைந்தது!

இலங்கையில் தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.
அந்த வகையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி 12 மரணங்களே பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,484 ஆக உயர்வடைந்துள்ளது.

இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டில் தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நேற்றைய தினமே 15 ஐ விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில் 649 பேருக்கே கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.