ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டுவந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று தலவாக்கலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இயலாமையுடன் செயற்படும் அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபாய் விடயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தால் முடியாது என்றும் முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.