May 29, 2025 18:14:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் ஆதிவாசிகள் தலைவர் அதிருப்தி!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என இலங்கை ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோ தெரிவித்தார்.

இன்று (16) ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

உர நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த அவர், மக்கள் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து இரண்டு இடங்களில் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.