சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இலங்கையில் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமாரன் இசை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை அண்ணாத்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
‘அண்ணாத்த’ படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள், ஆறாவதாக பிஜிஎம் அண்ணாத்த பாடலுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அண்ணாத்த படத்தில் சற்று வித்தியாசமாக இம்முறை இசையமைப்பாளர் டி. இமான் நாதஸ்வரத்தில் மட்டுமே வைத்து தீம் மியூசிக்கை உருவாக்கியுள்ளார்.
இலங்கை நாதஸ்வர கலைஞர் பஞ்சமூர்த்தி குமரனை வைத்து தீம் மியூசிக் உருவாக்கப்பட்டுள்ளது. இது புதுமையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாத்த படத்தை மேலும் மெருகூட்டும் வகையில், சற்று வித்தியாசமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்த நாதஸ்வர இசை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலங்கையின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் முகநூலிலும் பகிர்ந்திருக்கிறார்.
அதில் இசையமைப்பாளர் இமானின் ஸ்டூடியோவில் நாதஸ்வரம் வாசிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை நாதஸ்வர கலைஞர் ஒருவர் இந்திய தமிழ் சினிமாவில் இசை வழங்கியுள்ளதுடன், அதிலும் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு பின்னணி இசையை வாசித்துள்ளமை வரவேற்புக்குரியது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது.
Immense Joy to Introduce a Nadaswaram player Mr.K.P.Kumaran from Jaffna for my upcoming film #Annaatthe He will be playing an instrumental version of a song in the album!
வாழ்க தமிழ் வளர்க தமிழ்!#DImmanMusical
Praise God! pic.twitter.com/fSDyMjRo9l— D.IMMAN (@immancomposer) October 14, 2021