இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு உற்பத்தியான ‘ஹைலன்ட்’ பால் மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 225 ரூபாவினாலும், 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய ‘ஹைலன்ட்’ பால்மா ஒரு கிலோ கிராம் பக்கட் ஒன்றின் விலை 1170 ரூபாவாகவும், 400 கிராம் பக்கட் ஒன்றின் விலை 470 ரூபாவாகவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 9 ஆம் திகதி முதல் கிலோ ஒன்று 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.