
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த தினம் நிகழ்வு, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது
இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.