January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யூடியூபில் ஏ.ஆர்.ரஹ்மானை விஞ்சிய யொஹானி!

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை ஏ. ஆர். ரஹ்மானின் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கையையும் மிஞ்சியுள்ளது.

“மெனிகே மகே ஹிதே” பாடல் மூலம் யொஹானி டி சில்வா  சர்வதேசத்தில் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து இவரின் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தது.

ஒஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸின் எண்ணிக்கை 2.93 மில்லியனாக உள்ள நிலையில், யொஹானியின் யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 2.96 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.

எனினும், ஏ.ஆர். ரஹ்மானை டுவிட்டரில் 23.7 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.யொஹானியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 15,800 ஆக உள்ளது.