இலங்கையில் வாழ்க்கைச் செலவு நூற்றுக்கு 200 வீதத்தால் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, ருவான் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ளதனால் அவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் ஒருபுறம் போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில், மறுபுறம் ஆசிரியர்களும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருவதாக கூறியுள்ள அவர், இந்தப் பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு கொரோனா தொற்று நிலைமையே காரணம் என கூறிய போதும், பிரச்சினைகளுக்கு உண்மையான காரணம் அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சரியான திட்டங்கள் இல்லாமையே என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.