
இலங்கை சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயத்திற்கு முன்னேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தும் நாடுகள் பச்சை வலயத்தில் சேர்க்கப்படும் என்று அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
எனினும் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமை எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் பதிவாகும் தினசரி கொவிட் உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் சுகாதார ஸ்தாபனம் உட்பட பல சர்வதேச அமைப்புகளால் இலங்கையை மீண்டும் பச்சை வலயத்தில் அனுமதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.