January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் இளம் பாடகி யொஹானிக்கு மறக்கமுடியாத பரிசு!

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு மறக்கமுடியாத பரிசை வழங்க உள்ளதாக தேசிய மரபுரிமைகள்,  அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமருடன் ஆலோசித்துள்ளதாகவும் விருதைத் தாண்டி ஏதாவது பரிசு அறிவிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதில் யொஹானியின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா சென்றுள்ள யொஹானி இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோரை சந்தித்துள்ளார்.

https://twitter.com/Jharrisjayaraj/status/1447469700686893058?t=UFl9m7QEKn-PQEyRRsV5tQ&s=19

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றது.