இலங்கையில் சமையல் எரிவாயு, அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உணவகங்கள் உணவுப் பொருட்களில் விலைகயை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
பொருட்களில் விலை உயர்வுக்கு சமாந்திரமாக, உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி உணவுப் பார்சல்கள், பராட்டா ரொட்டி மற்றும் கொத்து ரொட்டி, தேநீர் ஆகியவற்றின் விலைகளை குறைந்தது 10 ரூபாவினால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அரிசி கிலோ ஒன்று 20 முதல் 50 ரூபா வரையிலும், பால்மா 250 ரூபாவினாலும், கோதுமை மா 10 ரூபாவினாலும் மற்றும் சமையல் எரிவாயு 1257 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.