November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள 680 பாடசாலைகள் இம்மாதம் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி வியாழக்கிழமை மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தந்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோர ஆளுநர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 ஆரம்பப் பாடசாலைகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

மேலும், நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 பரவல் காரணமாக 6 மாதங்களாகப் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.