கொவிட் தொற்றுக்கு மத்தியில் வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பரீட்சை சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் முறையை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இலிருந்தும் உத்தியோகபூர்வ கைத்தொலைப்பேசி செயலியான DoE ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு மற்றும் அடுத்துவரும் ஆண்டுகளில் சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்கள் இவ்வாறு இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதற்கு முன்னைய ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து பரீட்சைகளினதும் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு 2001 மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளின் முடிவுகளை இணையவழியில் பெற்றுக்கொள்பவர்கள் முன்னதாக தபால் நிலையத்தின் ஊடாக 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, தொலைபேசி அல்லது மின்னஞ்சலின் ஊடாக பெற்றுக்கொள்ளும் குறிப்பு இலக்கத்தை பயன்படுத்தி https://certificate.doenets.lk/ என்ற இணைய முகவரியில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கு மின்னஞ்சல் மூலமும் விண்ணப்பிக்க முடிவதோடு, முடிவுகளை இணையவழியில் இலவசமாக சரிபார்க்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.