இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் மீதான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, பால்மா நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புக்கமைய ஒரு கிலோ பால்மா பக்கட் ஒன்று 1200 ரூபாவுக்கும், 400 கிராம் பக்கட் ஒன்று 470 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று அந்தச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.