June 16, 2025 10:23:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்!

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து மீதான விலைக்கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையில்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கக் கூடாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.