January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கான அறிவித்தல்

Photo: Facebook/ BIA

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற பொருட்கள் விற்பனை நிலையங்களில், வெளிநாட்டில் இருந்து வரும் தினத்திலேயே பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்று விமான நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்கள் மாத்திரம் இவ்வாறாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையத்தில் தீர்வையற்ற பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் போது, அவர்களின் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அதற்கு அனுமதிக்கப்படுவர்.

எவ்வாறாயினும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்த நாட்களில் விமான நிலையம் வந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த பின்னர் குறித்த விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், இனி அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.