November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித் நிவாட் கப்ரால் வகித்த இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமே குறித்த இராஜாங்க அமைச்சு இவ்வாறு நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சின் பொறுப்பாளராகச் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, குறித்த இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் நிதி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் என்று வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.