January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யொஹானிக்கு சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கும் பதவி!

இலங்கையின் பிரபல இளம் பாடகி யொஹானி டி சில்வாவிற்கு சுற்றுலாத்துறையின் சிறப்பு தூதுவர் பதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த பதவியை யொஹானி டி சில்வா ஏற்றுக்கொண்டு, அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க, அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான ஆவணங்களை சமர்பித்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு யொஹாயின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 டுபாய் கண்காட்சியின் ‘இலங்கை தினத்தில்’ யொஹானியின் பாடல்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட அமைச்சு தீர்மானித்துள்ளது.