
File Photo
அனுராதபுரம், மின்னேரியா பிரதேசங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 7.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த, 30 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடம் இருந்து 2.9 மில்லியன் ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்தோடு அவரிடமிருந்து, 2.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான லொரி ஒன்றையும், 900,000 ரூபாய் மதிப்புள்ள மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மற்றும் 175,000 ரூபாய் பெறுமதியான மின்சாதன பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த வாகனங்களும், பொருட்களும் ஏ.டி.எம் இயந்திரங்களில் கொள்ளையிடப்பட்ட பணத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.