
ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டை இந்தியாவுக்கு சீனாவுக்கும் விற்பனை செய்வதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று ராஜபக்ஷ அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்த வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்களின் தோல்வியால் இன்னும் சில மாதங்களில் விவசாயிகள் ஏழையாகி, நாட்டில் பஞ்சம் ஏற்படும் என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கும் சில ஊடக நிறுவனங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடகவியலாளர்கள் ஊடக முதலாலிகள் விரும்பும் வகையில் செயற்பட வேண்டாம் என்று ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று அரசாங்கத்திற்குள் இருப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக சில ஊடகங்கள் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபட்டு விடும் என்று போலி செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.