இலங்கையில் மேலும் 40 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒக்டோபர் 2 ஆம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 18 பெண்களும், 22 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,059 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் ஒன்றரை மாதங்களின் பின்னர் இலங்கையில் தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 542 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 520,172 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 459,298 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.