கொரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளாத எவரும் திருமண மண்டபங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான திருமண சேவை வழங்குனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய நிலைமையில் திருமண வைபவங்களில் அதிகபட்சமாக 50 பேர் மாத்திரம் கலந்துகொள்வதற்கான அனுமதியை கொவிட் ஒழிப்பு குழுவிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி வீடுகளில் திருமண வைபவங்களை நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, திருமண வைபவங்களில் எவராவது ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமலும் மற்றும் மது அருந்தியாவறும் நிகழ்வுகளில் நடனமாடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவ்றான நபர்களுக்கு பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்றும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், திருமண முன்பதிவை ஏற்றுக்கொள்வதற்கு முன் கட்டாயம் அதற்கான நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான திருமண சேவை வழங்குனர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.