கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1156 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய செப்டம்பர் 2 ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்தச் சுற்றுவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 531 பேரும், ஊழல் – மோசடி குற்றச் செயல்கள் தொடர்பில் 491 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.