இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிராமிய வீதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி இந்த நிதியை வழங்க உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்திற்கு அமைவாக 100,000 கிலோமீட்டர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை உலக வங்கி வரவேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் உள்ளடக்கிய சுமார் 3000 கிலோமீட்டர் நீளமான வீதிகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு கிராமப்புறங்களில் விவசாய பயிர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் பயிர் சேமிப்பு களஞ்சியங்களையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.