May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக வங்கியிடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் இலங்கை!

(Photo: twitter/World Bank Health)

இலங்கை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்காக உலக வங்கியிடம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டு மக்கள் சனத் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் இலக்கை அடைவதற்காக இந்த கடன் உதவி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

பெற்றுக் கொள்ளப்படும் இந்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கும், தடுப்பூசி வழங்கும் பணியின் ஏனைய செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.