January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இணையவழி லொத்தர் சீட்டை அறிமுகப்படுத்த யோசனை!

இணையவழி ஊடாக லொத்தர் விற்பனையை மேற்கொள்ள யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை தொடர்ந்து, காகித லொத்தர் சீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இணையவழி லொத்தர் சீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, லொத்தர் விற்பனையை சார்ந்து இருக்கும் சுமார் 25 ஆயிரம் குடும்பங்களின் தொழிலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இணையவழி லொத்தர் விற்பனை முறை ஏன் பின்பற்றப்படவில்லை என்று கோப் குழு தம்மிடம் கேட்டதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 41 நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் சுமார் 300 கோடி ரூபாய் வருவாயை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.