January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார் யொஹானி!

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்திய பார்வையாளர்களுக்கு முன்னால் நிகழ்த்தும் முதல் இசை நிகழ்ச்சி புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ளது.

‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகி யொஹானி டி சில்வா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணமானார்.

‘ஸீ லைவ்’, யொஹானியுடன் இணைந்து ஹைதராபாத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து யொஹானி ஒக்டோபர் 3ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஸீ லைவ்’ இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

யொஹானி, நாட்டுக்கு திரும்புவதற்கு முன் மும்பையில் ஒரு ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

“ஷிட்டாட்” பாலிவுட் திரைப்படத்துக்கான யொஹானியின் பாடலும் தற்போது ஹிட் ஆகி வருகிறது.

தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் ‘மை ஹார்ட்’ பாடலை யொஹானி பாடுகிறார்.

இவரின் ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் 130 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.