June 2, 2025 0:41:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பறந்தார் யொஹானி

இலங்கையின் இளம் பாடகர் யொஹானி டி சில்வா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளார்.

யொஹானி இந்தியாவுக்கு புறப்படும் போது, ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் விசேட பிரியாவிடை நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இசைத் துறையில் யொஹானியின் அடைவுகளைப் பாராட்டி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி, மகிழ்ந்துள்ளனர்.

ஸீ லைவ், யொஹானியுடன் இணைந்து ஹைதராபாத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

யொஹானி நாளை மற்றும் ஒக்டோபர் 3ஆம் திகதி ஸீ லைவ் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

ஷிட்டாட் பாலிவுட் திரைப்படத்துக்கான யொஹானியின் பாடலும் ஹிட் ஆகி வருகிறது.

‘மெனிகே மகே ஹிதே’ பாடல் 130 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.