சீன நிறுவனம் ஒன்றின் சேதன உர இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சீன நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதி செய்த சேதன உரத்தை பரிசோதித்த பின்னரே இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்ததாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பெக்டீரியாக்கள் அடையாளம் காணப்பட்டதாக விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன நிறுவனத்தின் சேதன உரத்தில் பெக்டீரியாக்கள் காணப்படுவது இரண்டாவது பரிசோதனையிலும் உறுதியானதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜன்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் எந்தவித சேதன உரத்துக்கும் அனுமதி வழங்குவதில்லை என்று விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்று விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.