November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் டொலர்

File Photo: Facebook/ ports authority srilanka

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக, 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

அரச வங்கிகளுக்கு இந்த நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதி தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் டொலர் நெருக்கடி நிலைமையால், துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களை வெளியேற்ற முடியாது பல வாரங்களாக அவை துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.

இவற்றை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த வாரம் பிரதமர் அறிவித்திருந்தார்.

இதன்படி இதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.