இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, தனது முதலாவது பாலிவுட் பாடலை இன்று வெளியிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் வெளிவரவுள்ள ‘ஷிட்டாட்’ பாலிவுட் படத்தின் பாடல் ஒன்றை யொஹானி ஹிந்தியில் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் மூலம் யொஹானி இந்திய இசைத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
ராதிகா மாதன், சன்னி கௌஷல், மோஹித் ரெய்னா மற்றும் டயனா பென்டி நடிக்கும் ஷிட்டாட் படத்தை குனால் தேஷ்முக்த் இயக்கியுள்ளார்.
‘மெனிகே மகே ஹிதே’ பாடல் ஹிட் ஆகியதைத் தொடர்ந்து, யொஹானிக்கு இந்திய இசைத் துறை வரவேற்புகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
‘மெனிகே மகே ஹிதே’ பாடல் யூடியுபில் 129 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
‘ஷிட்டாட்’ படத்துக்கான பாலிவுட் பாடலும் இப்போது யூடியுபில் ஹிட் ஆக ஆரம்பித்துள்ளது.