May 2, 2025 8:13:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகிறார் லைக்கா குழுவின் அல்லிராஜா சுபாஸ்கரன்

லங்கா பிரிமியர் லீக் முதலாம் தொடரில் சாம்பியனான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை லைக்கா குழுவின் அல்லிராஜா சுபாஸ்கரன் வாங்கியுள்ளார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டனில் வசித்து வரும் தொழில் முனைவோர் ஆவார்.

கிரிக்கெட் நாட்காட்டியில் எல்பிஎல் போட்டி முக்கிய நிகழ்வாக இடம்பிடிக்கும் என்று அல்லிராஜா சுபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னணி கிரிக்கெட் வீரர் திசர பெரேரா தலைமையில் இலங்கையின் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி எல்பிஎல் முதலாம் தொடரில் சாம்பியனானது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் புதிய உரிமையாளராக லைக்கா குழு இணைந்துகொண்டமைக்கு எல்பிஎல் பிரசார நிறுவனத்தின் தலைவர் அனில் மொஹான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு பிரதேசத்துடன் தனக்கு உணர்வுபூர்வமான இணைப்புகள் காணப்படுவதாக அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் முதலாம் கட்ட போட்டிகள் 557 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.