வாகன உதிரிப் பாகங்களை போன்று சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 16 கிலோ தங்கம், சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
போலிய வியாபார பெயரைப் பயன்படுத்தி, விமான பொதிகள் சேவை நிறுவனத்தின் ஊடாக ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து சட்ட விரோதமாக இந்த தங்கக் கட்டிகள் வந்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகன உதிரிப் பாகங்களை போன்று தங்கக் கட்டிகளை உருமாற்றி அவற்றை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபாய் (இலங்கை ரூபாய்) என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.