File Photo
இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறுவர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிறக்கும் குழந்தைகளுக்கான அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான கண்காணிப்பு எண்ணை வழங்குவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வைத்தியர் பெர்னாண்டோவின் முயற்சியில் உருவாகியுள்ள திட்டம் சிறுவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தாய்நாடு குறித்த உணர்வையும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, சுகாதாரம், நிதி நிறுவனங்களுடனான செயற்பாடுகள், தகவல் மற்றும் தொடர்பாடல்களின் போதும் இதனை பயன்படுத்திகொள்ளமுடியும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.