கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்காக சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறையினருடன் கலந்தாலோசித்து நீதி துறையுடன் இணைந்து தேவையாயின் சட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்படலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை 11,593,990 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் 2 டோஸையும் 14,367,807 பேருக்கு முதலாவது டோஸையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தற்போது 30 வயதுக்கு குறைவானவர்களுக்கும் சிறுவர்களில் தெரிவு செய்யப்பட்ட பிரிவினருக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு விரைவுபடுத்தியுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டை கட்டுப்பாடுகளுடன் திறக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று (25) தெரிவித்திருந்தார்.