May 28, 2025 8:45:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாகவே நாட்டில் சில அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் குறிப்பிட்டார்.

உள்ளூர் சந்தைகளிலும் பால் மாவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு சர்வதேச சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் இறக்குமதி செய்வதில் காணப்படும் சிக்கல்கள் முக்கிய காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.