ஒக்டோபர் முதலாம் திகதி வரையறைகளுடன் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை கூறினார்.
எனினும் 30 ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நாடு திறக்கப்படும் போது மக்கள் கண்டிப்பாக கொவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.