September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கத் தீர்மானம்!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் நான்கு கட்டங்களாகப் பாடசாலைகளைத் தொடங்க தயாராகி வருவதாகக் கல்வி அமைச்சு உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர், சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைய, முறையான திட்டங்களுடன் பாடசாலைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதல் கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5131 பாடசாலைகளையும் மற்றும் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளைக் கொண்ட 3784 பாடசாலைகளையும் ஆரம்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அதிகாரிகளினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களில், கல்வி துறைசார் அதிகாரிகள் தமக்கு பொறுப்பான கல்வி வளையங்களில் சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்ப பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.