November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளவும்’: பிரிட்டனின் பயண வழிகாட்டல்

இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளும்படி பிரிட்டன், அதன் பிரஜைகளுக்கு வழிகாட்டல் வழங்கியுள்ளது.

பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கை வெளியேறினாலும், கொரோனா பரவல் அபாயம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்கள் தவிர ஏனையவற்றைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரிட்டனின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் தொடர்வதால் குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய செயற்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதும் பிரிட்டனின் வழிகாட்டலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் இடங்கள் உள்ளடங்களாக இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.