இலங்கையின் பிரபல மூலிகை மருத்துவர் எலியந்த வைட் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கிரிக்கெட் வீரர்களான லசித் மாலிங்க, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பண்டைய கால மருத்துவ முறைகள் மூலம் நோய்களையும் உபாதைகளையும் குணப்படுத்தியவர் எலியந்த வைட்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வார காலம் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் மரணம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க உள்ளிட்டோர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
I’m deeply saddened by the sudden passing of Dr. Eliyantha White. My deepest condolences to his friends and family during this difficult time. His legacy will continue to live through all the lives, he touched and healed of various ailments. pic.twitter.com/UzlqHNsPgc
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) September 23, 2021
My foot injury in 2008 … was actually a miraculously healed injury.
Thanks to you I was able to go to greater heights in my career and for that, I am forever grateful.
May you attain the supreme bliss of Nibbana
-Mali- pic.twitter.com/LSVYEjEk7Q— Lasith Malinga (@malinga_ninety9) September 22, 2021