November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன்களால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன்களால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் கடன் பெறும் எல்லையை 400 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்து, 3,397 பில்லியன் ரூபாய்களாக திருத்துவதற்கும், அதற்காக குறித்த ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான கடன் எல்லையாக 2,997 பில்லியன் ரூபாய்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

கொவிட்- 19 தொற்று காரணமாக மேலெழுந்துள்ள நெருக்கடி நிலைமையில், அரச வருமானம் குறைவடைந்தமையும், சுகாதாரத்துறையின் செலவும் சமூகத்தில் வருமானம் இழந்தவர்களின் சமூகப் பாதுகாப்பு, தமது வருமானத்தில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இழக்கப்பட்டமையால் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக மேலதிக நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு நேரிட்டமையாலும், ஏனைய துறைகளில் ஏற்பட்ட செலவு அதிகரிப்பாலும் 2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லையை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.